எத்தனை எத்தனைபேர் இரட்சிப்பை விரும்பினாலும் அத்தனைபேரையும் இரட்சிக்க வல்ல மகாபெரிய இரட்சிப்பு அவருடைய இரட்சிப்பு.
எத்தனை கோடிப்பேர் வந்தாலும் அத்தனைபேரையும் கழுவக்கூடிய வல்லமையான இரத்தம் அவருடைய இரத்தம்.
எத்தனைபேர் சமாதானம் வேண்டினாலும், அத்தனைபேரையும் அமைதலாக்கும் சமாதானம் அவருடைய சமாதானம்.
எவ்வளவு திரளான மக்கள் இயலாமல் வந்தாலும் அவர்களெல்லோரையும் தாங்கும் பெரிதான கிருபை அவருடைய கிருபை.
எவ்வளவு வெறுமையில் கோடானுகோடிபேர் இருந்தாலும், அனைவரிலும் அன்புகூரக்கூடிய அளவுக்கு உன்னதமானது அவரது அன்பு.
எவ்வளவு திரள்கூட்டம் மக்கள் அவர் அணைப்புக்குள் வந்தாலும், அத்தனைபேரையும் காக்கும் வல்ல பெரும்கரம் அவருடைய கரம்!
எவ்வளவு மீறுதல், அக்கிரமம், பாவம் இருந்தாலும் அவ்வளவையும் கழுவித்துடைத்து வெள்ளையாக மாற்றும் பரிசுத்தம் அவர் பரிசுத்தம்!
இப்படிப்பட்ட உன்னதமான கர்த்தரின் சேனைகள் பெற்றிருக்கும் ஆசிர்வாதம் எத்தனை மகத்துவமான ஆசிர்வாதம்!