எண்ணங்களை மேம்படுத்துங்கள்

சுயமுன்னேற்றப் புத்தகங்கள்

இன்று சில சபைக்குள் பிரசங்கிக்கப்படுகிற சில புத்தகங்கள்:

  1. Power of positive thinking by Normen Vincent Pele
  2. Think and Grow Rich 
  3. The magic of Thinking big – David Schwartz
  4. The success principles – Jack Canfield
  5. உன்னால் முடியும் தம்பி – எம்.எஸ். உதயமூர்த்தி
  6. மற்றும் பல.

ஆனால், இந்தப் புத்தகங்களின் பெயரையோ, எழுத்தாளர்களையோ குறிப்பிட்டால் மக்கள் விரும்பமாட்டார்கள் என்பதெல்லாம், இதையெல்லாம் கர்த்தர் சொன்னார் என்று வேதாமத்தில் சில வசனங்களை நுட்பமாக வியாக்கியானம் செய்துவிட்டால் போதும். சபை குஷியாகிவிடும்! எனவே மேற்சொன்ன புத்தகங்களுக்கு கறுப்பு அட்டைஇட்டு வேதாகமம் என்று பெயரிட்டால் எல்லாம் சுகமே! எதிர்காலம் டாப். ஏனென்றால் இதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். 

இதற்காக கீழே உள்ள வசனங்களை மறைக்கவேண்டும். மறக்கடிக்க வேண்டும். அல்லது புறக்கணிக்கிற அளவுக்கு புரட்டவேண்டும்:

அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள். II தீமோத்தேயு 3:12 (பவுல்)

இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள். I பேதுரு 1:6  (பேதுரு)

மத்தேயு 5:12 சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே. (இயேசு).

நாம் நினைவில் கொள்ள வேண்டியது சுயம், அதாவது நாம், மாறாமல் அப்படியே முன்னேற நினைப்பது உண்மையில் அபாயமானது. வாழ்க்கையில் மாற்றமின்மை முன்னேறினால், மாற்றமில்லாத வாழ்க்கை பிரமாண்டமான வளர்ந்து நிற்கும். அதனால், நமக்கு சமூகத்துக்கு ஒரு பயனும் இல்லை. இதனால்தான் வேதாகமம் முன்னேற வழிகளைத் தராமல், மனம் புதிதாவதினால் மருரூபம் அடையச் சொல்கிறது. அதுவும் கிறிஸ்துவைப் போன்ற மனம் என்று மாதிரியையும் வைத்துள்ளது. உங்கல் சபைகளில் எதைப் போதிக்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *