இதயமாற்று சிகிச்சை

ஜெபத்தில் உங்கள் இருதயத்தை தேவனிடத்தில் கொண்டு செல்லுபோதெல்லாம் அவருடைய இருதயத்தை நாம் பெற்றுக் கொள்கிறோம் என்றார் கிறிஸ் லன்கார்ட்.  அதாவது, ஒவ்வொருமுறை ஜெபிக்கும்போதும் ஒரு இருதய மாற்று சிகிச்சையை உணர்ந்தால், அதுதான் சரியான ஜெபம். 

ஆவிக்குறிய வாழ்வின் ஆரம்பத்தில் இச்சிகிச்சை கடினமானது தான். ஆனால், அந்தக் கடினத்திற்குக் காரணம் அவரல்ல, நம் இருதயமே! நம் இருதயத்தின் தன்மை, அதன் போக்கு என்று எல்லாவற்றையும் என்றோ அறிந்தவர் அவர் என்பதை, நம் இருதயம் (நாம்) ஏற்கத் தாமதாவதால் ஏற்படும் கடினம் இது. 

கொஞ்சம் பொருத்தம் இல்லாத இருதயங்கள் பொருந்திப் போவதிலும், நம் இருதயம் அவருக்கு இணங்கிப் போவதிலும் உள்ள தயக்கம் இருக்கும்வரை இந்த கடினத்தன்மை இருக்கும். ஆனால், அவரோ, கடினமான இருதயத்தை மாற்றி நவமானதை வைக்கிறவர். எனவே, மாற்றம் நிச்சயம் உண்டு. அதில் தொடர்ந்து மாற்றப்படுவது நம் விருப்பங்கள்தான் என்பதால் புது இருதயம் கொண்டவர்கள் புது விருப்பங்களையும் அவர் உண்டாக்குவதில் இருந்தே பெற்றும் கொள்கிறோம்.

விருப்பங்கள் வெறும் வெளிப்புறத்தேவைகளாக முதலில் இருந்தாலும், சிகிச்சை நடைபெற நடைபெற பாவ எதிர்ப்பு, பரிசுத்தத்தின்மேல் வாஞ்சை, அருடைய நீதியில் பசி தாகம், அவருடைய அன்பு, இரக்கம், என்று புது இருதயம் நம்மில் பரிமளிக்கும்.

இப்படி, நம் விருப்பங்கள் தேவனிடத்தில் சமர்ப்பிக்கப்படும் ஜெபத்திலேயே, தேவன் தம் விருப்பத்தை நம் இருதயத்திலுள் பொருத்திவிடுகிறார். ஆழமான கிறிஸ்தவ அனுபவத்துள் செல்லச்செல்ல, இரு இருதயங்களும் ஒன்றாகும் விந்தையும் தொடர்ந்து நடைபெறும்.

அப்புறம் வெற்றிகரமான சிகிச்சை அங்கே நடைபெற்றிருக்கும். அவருடைய இருதயத்தையே பெற்றிருப்போம்.

உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன். எசேக்கியேல் 36:26

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *