கோபங்கொண்ட தேவனுடைய கரத்தில் பாவிகள்

கிறிஸ்தவ வரலாற்றிலேயே மறக்கமுடியாத, அஸ்திபாரங்களை அசைத்த பல பிரசங்கங்களில் முதன்மையானது ஜோனாதன் எட்வர்ட்ஸ் (Jonathan Edwards) அவர்கள் 1741-ம் ஆண்டு பிரசங்கித்த “கோபங்கொண்ட கடவுளின் கரத்தில் பாவிகள்” (Sinners in the Hands of an Angry God) என்னும் இச்செய்தி.

அமெரிக்காவில் “பெரிய விழிப்புணர்வு” (Great Awakening) நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில், என்ஃபீல்ட் (Enfield) என்ற இடத்தில் இது பிரசங்கிக்கப்பட்டது. இச்செய்தியைக் கேட்டுக்கொண்டிருந்த ஜனங்கள், தேவனுடைய உக்கிரகோபத்தையும், நரகத்தின் பயங்கரத்தையும் ஆவியானவரின் மூலமாக உணர்த்தப்பட்டபோது, தாங்கள் அந்த வினாடியே பாதாளத்தில் வழுக்கி விழுந்துவிடுவோமோ என்ற அச்சத்தில், ஆலயத்தின் தூண்களையும், இருக்கைகளையும் இருக்கப் பற்றிக்கொண்டு கதறினார்கள் என்கிற வரலாறு உண்டு.

இன்றைய நவீன கிறிஸ்தவம் தேவனுடைய அன்பை மட்டுமே ஒருபக்கமாய் போதித்து, அவருடைய நீதியையும், பாவத்தின்மேல் அவருக்குள்ள பயங்கரமான கோபத்தையும் மறைத்துவிடுகிறது. நம்மை ஒவ்வொரு வினாடியும் நரகத்தில் விழாமல் தாங்கிக்கொண்டிருப்பது தேவனுடைய சுத்த கிருபையே (Mere Grace) அன்றி, நம்முடைய சுயநீதி அல்ல என்பதை சவுக்கடி கொடுப்பதுபோல உணர்த்தும் சத்தியம் இது. இது வாசிப்பதற்கு லேசான செய்தி அல்ல; ஆனால், ஆத்துமாவை நித்திய அழிவிலிருந்து தப்புவிக்கக்கூடிய, பயபக்தியை ஊட்டுகிற மருந்து. நிதானத்தோடும் ஜெபத்தோடும் வாசியுங்கள். அவசியப்பட்டால் Print செய்து வைத்துக்கொள்ளுங்கள். பிறரிடமும் பகிருங்கள்.

இந்தச் சிறு கட்டுரையை Download செய்ய கீழே கிளிக் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *