
டான் ரிச்சர்ட்ஸன் – அறியப்படாத மக்களிடையே அறியப்படாத தேவன்
முன்குறிப்பு: இதுவரை ஒருமுறைகூடக் கேள்விப்பட்டிராத ஜனங்களுக்கான நியாயத்தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது எனக்கு வந்த ஒரு சந்தேகம். அது, மேலும் அறிய சில வருடங்கள் முன்னர் ஒரு தேடலைத் துவக்கியது. உதாரணமாக, எவரும் நுழைய இயலாத அமேஸான் காடுகளுக்குள் வசிக்கும் மக்கள் இயேசு என்கிற பெயரைகூடக் கேள்விப்படாதிருந்தால் அவர்கள் நித்திய வாழ்வு அதோகதிதானா என்கிற கேள்வி!. எனவே, சிலவருடங்களுக்கு முன்னர் அதை அறிந்து ஒரு கட்டுரையாக எழுதவும் செய்தேன். (ஆனால், அதை இங்கு பதிவிடவில்லை). ஆனால், அப்போதைய…

தாங்கமாட்டீர்கள் பாகம் 6 – சுவிசேஷம்
[பாகம் 1] [பாகம் 2] [பாகம் 3] [பாகம் 4] [பாகம் 5] “ஓ, இதுதானா அது” என்கிற ஆச்சரியமான அனுபவம் இல்லாதவர் எவரும் இருக்க வாய்ப்பில்லை. பலவருடங்கள் படித்துப் பரிட்சைகளில் பாஸாகி இருந்தாலும் அவற்றின் உண்மையான விளக்கங்கள் பிற்காலங்களில் கிடைத்த அவை புரிகிற காலத்தில் கிடைத்திருக்கும். “இதைத்தான் படிக்க அப்போது திணறினோமா?” என்று நினைக்கவைக்கும் தருணங்கள் அவை. கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து பூமியில் இருந்த காலங்களில், தன் சீஷர்கள்தான் என்றாலும் அவர்களுக்கு எல்லாவற்றையும் விளக்கமாகப் போதித்துவிடவில்லை. அவர் இறைத்தன்மை கொண்டிருந்தவர் என்றபோதிலும் சீஷர்களின் கேட்டறியும்…

தாங்கமாட்டீர்கள் – பாகம் 2
(முந்தைய பாகம்) பூமியில் கிறிஸ்து இருந்த காலங்களில் சீஷர்களால் விளங்கிக்கொள்ள அப்போது இயலாது என்பதாலேயே பலவற்றை அவர்களிடம் சொல்லவில்லை என்று சென்ற பாகத்தில் பார்த்தோம். ஒருமுறை ‘இப்போது சொன்னால் தாங்கமாட்டீர்கள்’ என்றேகூடச் சொல்லிவிட்டார். அவை என்ன என்று சீடர்களும் கேட்டாற்போல் தெரியவில்லை. இங்கு போதித்தவர் கிறிஸ்து! அவரைவிட மேலான போதகர் இருக்க வாய்ப்பில்லை. இருந்த போதிலும் அப்போது அவர்கள் பிற்காலங்களில் அவர்களாகவே கற்றுக்கொள்ள வேண்டிய காலத்திற்கென, பலவற்றை அவர் விட்டுவிட்டே சென்றார். அப்போது போதித்தவற்றில்கூட புரிந்து கொள்ளவும்…

தேவ பெலன்
‘ பாவியாகிய எனக்காக கிறிஸ்து சிலுவையில் மரித்தார்’ என்பதை விசுவாசித்து அவரை ஏற்றுக்கொள்ளும் எவரும் இரட்சிப்பு என்கிற சுதந்தரமாகிய பலனை அடைகிறார்கள். ஆனால், அந்த நம்பிக்கையில் பெற்ற பலன் அத்துடன் நம் வாழ்வில் நின்றுவிடுவதில்லை. அது தொடர்ச்சியாக வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்வை வாழ பெலனும் செய்கிறது. “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது” என்று கொரிந்தியருக்கு எழுதும் முதலாம் கடிதத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் ஒரு முக்கியமான திறவுகோலை விட்டுச் சென்றிருக்கிறார். இதை, ‘இரட்சிக்கப்பட்ட…

கிருபை சத்தியம் கிறிஸ்து
கிறிஸ்து பூமியில் வந்தபோது கிருபையைக் குறித்துப் போதிக்கவில்லை. காரணம் அவர் மனு உருவில் வெளிப்பட்டதே கிருபையாகத்தான். அவர் கிருபையாக இருந்தார். (லூக்கா 18:13). சத்தியம் என்றால் என்ன என்று கேட்ட பிலாத்துவுக்கு அவர் பதில் சொல்லவில்லை. சத்தியத்தினிடமே சத்தியம் என்றால் என்ன என்று கேட்டால் எப்படி? சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவர் அவர். நானே சத்தியம் என்றவர். கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின. (யோவான் 1:17) கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் வார்த்தையான கிறிஸ்து மனிதருக்குள் வந்து வாசம்…

விடுதலைக்குத் தடை!
இரட்சிப்பில் பாவமன்னிப்பு என்பது நமக்குள் பிரதானமாக வந்திருக்கும் ஆசிர்வாதம். ஆனால், அத்துடன் அந்த ஆசிர்வாதம் நிறுவவிடுவதில்லை. மாறாக பாவத்தின் விளைவுகளால் வந்த விஷயங்களில் இருந்தும் நம்மை தேவன் தொடர்ச்சியாக பல நிலைகளில் விடுவிக்கிறார்; விடுவித்துக்கொண்டிருக்கிறார்; இன்னமும் விடுதலை செய்வார்! எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான். எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான் என்று சங்கீதக்காரன் எழுதும்பொழுது இரட்சிப்பின் ஆசிர்வாதமான இந்த விடுதலையை உணர்ந்து பாடலாக்கியிருக்கிறார்….

கிறிஸ்தவக் கிறிஸ்தவன்
நீங்கள் எந்தச் சபைக்குச் செல்வோராக இருந்தாலும் அங்கே சும்மா ஞாயிற்றுக்கிழமை மட்டும் சென்று உட்கார்ந்து எழுந்துவரும் கிறிஸ்தவராக இல்லாமல் – கிறிஸ்துவின் சீஷராக இருக்க சில விஷயங்களைக் குறித்த அறிவும் செயல்பாடும் அவசியம். (அவைகளை “குறைந்தது” ஏழு வகையாக கீழே பிரிக்க முயல்கிறேன்.) இவற்றில் பெரும்பாலான விஷயங்களை தவிர்த்துவிட்டு – பணச் செழிப்பு, ‘எங்கே விழுந்தீர்களோ அங்கேயே உயர்த்துவார்’, இயேசுவின் நாமத்தை சொன்னால் போதும்..சுகம், என்பதான வார்த்தை ஜாலங்கள், ஆட்டம் பாட்டம் என்று பொழுதுபோக்கு என்றிருந்தால் மேலே…

ஒரு வாழ்நாள் காலம்
தேவன் கிருபையாக அருளும் இரட்சிப்பைப் பெற ஒரு தீர்மானம் மட்டும்போதும்.