
என் கண்ணீருக்கு மவுனமாயிராதேயும்!
காத்திருப்பு கடினம். சில நிமிடம் கம்யூட்டர் boot ஆகும் நேரம் என்றாலும் சரி, ஒரு அலுவலகத்தில் வரவேண்டியவர் வந்து உட்காரவேண்டியவர் வரும் வரை அந்த சீட்டையே பார்த்துக்கொண்டிருப்பதும் சரி… கடினம்தான். எனக்கு பில்லிங் கவுண்டர்களில் காத்திருப்பது கொஞ்சம் சலிப்பையும் உண்டுபண்ணும். பொருளை வாங்கிக் காசு கொடுக்கக் காத்திருக்க வேண்டுமா? என்று நினைப்பதுதான் காரணம்! வாட்ஸப்பில் இரண்டு ப்ளூடிக்குகள் வரும்வரை காத்திருக்கமல் ஃபோன் போட்டுவிடுபவர்கள் உண்டு. காத்திருப்பு அவஸ்தை!. காரணம் அது நம்மிடம் இருக்க வேண்டிய, ஆனால் இல்லாத…

உனக்கு நரகம் தான்!
ஆதாமை தன் சாயலாகப் படைத்த தேவன், தன் சாயலின் மேன்மையான சிந்திக்கும் திறனை வைத்தார். இந்த சிந்திக்கும் திறன்தான் எதையும் ஆராய்ந்து பார்த்து ஏற்றுக்கொள்ளவும் புறம் தள்ளவும் உதவுகிறது. எதையும் யோசிக்காமல் அப்படியே யோசிக்காமல் ஏற்றுக்கொள்ளும் சமநிலை அற்ற தன்மை நம்மில் இல்லாததற்குக் காரணம் இந்த சிந்திக்கும் திறன் தான். அவர் சமநிலையான தேவன். எதையும் பின்யோசனையின்றி செய்பவரோ, செய்துவிட்டு அதன்பின் அதைக்குறித்து ஆராய்பவரோ அல்ல. மனிதனை அப்படி ஒரு பிறவியாகத்தான் வைத்தார். அவரது சாயல் என்பது…

வேற யாராவது இருக்கீங்களா?
தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். ஆதியாகமம் 1: 27 தேவன் மனிதர்களைப் படைத்ததுபோல வேறெங்கேனும் படைத்திருப்பாரா? இங்கு வேறு யாரேனும் உள்ளனரா? பூமியைப் படைத்து அதன் மண்ணில் இருந்து மனிதனைப் படைத்தவருக்கு வேறு எங்கேனும் அங்கிருக்கும் மண்ணை/தனிமங்களைக் கொண்டு அங்கே உயிரினங்களைப் படைத்திருப்பாரா? அதாவது ஏலியன்களை? 1950 ஆண்டு ஒரு சிறுகூட்டம் இயற்பியலாளர்கள் கூடி UFO (Unidentified Flying Object) என்கிற வானத்தில் அவ்வப்போது தெரியும்…

முரட்டுப் பக்தர்கள்
ஆங்கிலத்தில் லீகலிஸம் (Legalism) என்கிற வார்த்தை உண்டு. கிறிஸ்தவர்கள் மத்தியில் பிரபலமான வார்த்தை இது. இதன் அர்த்தம் “கடவுள் இதைத்தான் செய்யச் சொல்கிறார் என்று அவர் சொல்லாத ஒன்றைச் செய்யச் சொன்னதாக நினைத்துக்கொண்டிருப்பது”. தமிழில் இதைச் சட்டவாதம் என்று சொல்லலாம். “இதைச் செய்தால் சரி, இதைச் செய்யாவிட்டால் உன் அபிஷேகம் அம்பேல். இப்படிச் செய்தால் இரட்சிப்பு போச்சி!” என்று சொந்த விருப்பங்களை வேதம் காட்டும் ஒழுக்க நெறிகளாகத் திணிப்பதே இந்தச் சட்டவாதம். பெந்தேகோஸ்தே சபைகளில்தான் இதை அதிகமாக…

வாக்குத்தத்தங்கள் மந்திரக்கோல்களா?
இந்த வாழ்வுக்கான வாக்குத்தத்தங்கள் – பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்று வேதம் முழுவதுதிலுமே நமக்கென்று அருளப்பட்டிருக்கின்றன. வேதாகமம் வெறுமனே பரலோக வாழ்வுக்கு நுழையப் படிப்பதற்கான Entrace test coaching book அல்ல என்பது உண்மை. மறுமைக்கு மட்டுமல்ல, இந்த வாழ்வுக்கும் அவை உண்டு. அப்படி இல்லாவிட்டால், இந்த வாழ்வை உருப்படியாக வாழ இயலாது! ஆனால், வாக்குத்தத்தங்களின் பிரதான நோக்கம், நம்மை அழைத்தவரை அறிகிற அறிவிலே வளரவும், அந்த வளர்ச்சியில் அவரது உறவைப் பேணவும், அந்த உறவில்…

கடவுளின் திட்டத்தில் மனிதன்
மனிதனை சுய அறிவுடன் படைத்த நல்ல, நீதியுள்ள தேவன் நம் தேவன். இராஜாதிராஜாவாய் இருந்தாலும் சர்வாதிகாரியாய் அவர் இல்லை. நம்மைத் தேவதூதரிலும் சற்றுச் சிறியவராய்ப் படைத்தாலும், ரோபோக்களாய் இயந்திரகதியில் தான் விரும்பும்வண்ணம் மட்டுமே மனிதன் செயல்பட வேண்டும் என்று தேவன் நினைப்பதில்லை. மாறாக, முழுச் சுதந்திரம் கொடுத்து நம்மை இயங்கவிட்டதுமல்லாமல் தனக்கான வேலைகளையும் மனிதனுடன் பகிர்ந்து கொண்டு செய்வதில் ஆனந்தமடைபவர் அவர். இதை வேதம் முழுவதிலும் பல இடங்களில் கண்டு அறியலாம். இன்னும் சொல்லப்போனால், தான் செய்ய…

கல்வாரி சிந்தனைகள் -2
ஒரு பாத்திரத்தைச் சுத்தமாக்க வேண்டுமானால் நீர் வேண்டும் அல்லது ஒரு சிறு துண்டு துணியாவது வேண்டும். அதாவது, எதைச் சுத்தமாகக வேண்டுமானாலும் வேறு ஏதாவது ஒன்று வேண்டும்; நீர், நெருப்பு இப்படி ஏதாவது ஒன்று. இப்படி ஒரு பாத்திரத்தைக் கூட வெளிப்புறப்பொருள் ஒன்றைக் கொண்டுதான் சுத்தமாக்க இயலும் என்கிறபோது மனிதன் மட்டும் தன் அகத்தைச் சுத்தமாக்கிக் கொள்ளத்தன்னால் இயலும் என்று நினைப்பது விந்தை. இதை அறிந்தவர் கிறிஸ்து. எனவே, தன் இரத்தம் கொண்டு நம் இரத்தம் சுத்திகரிக்க…

ஏன் தாகமாயிருக்கிறேன் என்று சொன்னார் இயேசு?
நானே ஜீவ ஊற்று என்று சொன்னவர், நான் தரும் தண்ணீரை அருந்துபவன் ஒருக்காலும் தாகமடையான் என்று சொன்னவர் – எப்படி தாகமாயிருக்கிறேன் என்று சிலுவையில் சொல்லியிருக்கமுடியும். இது கிறிஸ்துவை அறியாதவருக்கு மட்டுமல்ல, அறிந்தவருக்கே புதிர்தான். சிறுவயதில் நான் நினைத்ததுண்டு: இயேசுவுக்கு சிலுவையில் வலிதெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் இறைவன் என்பதால் வலியை உடலில் இருந்து எடுத்துப் போட்டிருக்க அவரால் இயலும் என்று. ஆனால் அவர் அதைச் செய்யவில்லை, மாறாக உண்மையாகவே தன் சரீரத்தில் வேதனைகளை அனுபவித்தார் என்பது புரிய…

உள்ளுணர்வு… எண்ணங்கள்…சிறைபிடிப்பு
என் விருப்பம் எது, கிறிஸ்துவின் விருப்பம் எது? என்னை எதுவரை அவர் அனுமதிப்பார்? அல்லது, நான் எதையெல்லாம் அவர் அனுமதி பெற்றுச் செய்ய வேண்டும அல்லது பெறாமலேயெ செய்யலாம்? என்கிற கேள்விகள் கிறிஸ்துவுக்குள் வளரும்போது வரும் சில ஆரம்பகால கட்டக் குழப்பங்கள். ஆனால், நம் விருப்பங்கள், எண்ணங்கள் எல்லாம் அவரிடம் இருந்துதான் வரவேண்டும் என்பதுதான் சத்தியம் என்றாலும், பலரும் இதை உடனடியாக விரும்புவதில்லை. எனக்கென்று விருப்பங்களே இருக்கக்கூடாதா? நானாக நல்லவைகளைக்கூடச் செய்யகூடாதா? நானாக எடுக்கும் முடிவுகள் சரியானவையாக…

ஏன் கடவுள் நம்மைப் படைத்தார்?
மனிதர்களைக் கடவுள் படைத்திருந்தார் என்றால், மனிதனை ஏன் அவர் படைத்திருக்க வேண்டும்? மனிதனால் அவருக்கு என்ன பயன்? படைக்கப்பட்ட மனிதன் படைத்தவருக்கு என்ன செய்துவிடமுடியும் என்ற கேள்வி உங்களில் யாருக்காவது வந்திருக்குமானால் மகிழ்ச்சி. இறைவன் குறைவுள்ளவராக இருந்திருப்பாரேயானால் அவர் இறைவனாக இருக்க முடியாது. அவர் தன்னில்தான் நிறைவாகவே இருந்தார். மனிதனோ, மனிதனின் சேவையோ அவருக்குத் தேவைப்படவே இல்லை ஆனால், அவர் தான் அன்புகூறவும், தன்னிடம் சுயனலமில்லா அன்பை வெளிப்படுத்தவும் மனிதனைப் படைத்தார். அதுவும் இல்லாமல் அவரால் இருந்திருக்க…