Benny Alexander

கரும்பொருள் அல்லது கரும் ஆற்றல்

கரும்பொருள் அல்லது கரும் ஆற்றல்

கரும்பொருள் அல்லது கரும் ஆற்றல் (Dark Matter and Dark Energy) வானத்தை அண்ணாந்து பார்த்தால் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் சில கோள்கள், சந்திரன் என்று தெரிகிறதல்லா? அதைவிட்டு மீதி எல்லாம் இருள் மயம். இந்த இருளான பகுதிகள் எல்லாம் வெற்றிடங்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பீர்களால், அது தவறு. அவைகள் எல்லாம் நிறம் இல்லாத பருப் பொருள்கள். கண்ணால் காணப்படமுடியாததை ஆனால், பிரமாண்டமாக ஆற்றலைத் தேக்கிவைத்திருப்பவை. எவ்வளவு ஆற்றல்? கேலக்ஸிகள் எனப்படும் நட்சத்திரக்கூட்டங்களை தள்ளிக்கொண்டு போகும் அளவு அல்லது…

போதக ஐக்கியம்

போதக ஐக்கியம்

“பிறரிடம் இருந்தும் கற்றுக்கொள்ள மனமற்ற போதககர்கள் மிகவும் அபாயமான ஆசாமிகள்” என்று பல வருடங்கள் முன் எனக்குத் தெரிந்த ஒரு போதகர் ( பாஸ். மேத்யூஸ்) ஒரு முறை சொன்னார். அப்பொல்லோவைப் போல வேதாகமங்களில் வல்லவர்களாகவும், ஆவியில் அனலுள்ளவர்களாகவும், திட்டமாய் போதகம் பண்ணுபவர்களாக இருந்தாலும், நீங்களும், அதிக திட்டமாய் இறைவழியை விவரிக்கும் ஆக்கில்லா, பிரிஸ்கில்லாள் போன்ற மக்களை ஐக்கியத்தில் – உங்கள் வட்டத்தில் – வைத்திருப்பது அவசியம். உங்கள் உபதேசங்கள் ஆவியானவரால்தான் உறுதி செய்யப்படுகின்றன என்றாலும் ஐக்கியம்…

எண்ணங்களை மேம்படுத்துங்கள்

எண்ணங்களை மேம்படுத்துங்கள்

இன்று சில சபைக்குள் பிரசங்கிக்கப்படுகிற சில புத்தகங்கள்: ஆனால், இந்தப் புத்தகங்களின் பெயரையோ, எழுத்தாளர்களையோ குறிப்பிட்டால் மக்கள் விரும்பமாட்டார்கள் என்பதெல்லாம், இதையெல்லாம் கர்த்தர் சொன்னார் என்று வேதாமத்தில் சில வசனங்களை நுட்பமாக வியாக்கியானம் செய்துவிட்டால் போதும். சபை குஷியாகிவிடும்! எனவே மேற்சொன்ன புத்தகங்களுக்கு கறுப்பு அட்டைஇட்டு வேதாகமம் என்று பெயரிட்டால் எல்லாம் சுகமே! எதிர்காலம் டாப். ஏனென்றால் இதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.  இதற்காக கீழே உள்ள வசனங்களை மறைக்கவேண்டும். மறக்கடிக்க வேண்டும். அல்லது புறக்கணிக்கிற அளவுக்கு புரட்டவேண்டும்: அன்றியும்…

உணர்ச்சிப் பொங்கல்!

உணர்ச்சிப் பொங்கல்!

ஒரு நிகழ்வு குறித்து நாம் பெறும் அறிதல், மற்றும் புரிதலே உணர்வு. அதை வெளிப்படுத்தும் விதமே உணர்ச்சி. உணர்வு – Understanding after knowing.உணர்ச்சி – Feeling. தேவன் என்னை இரட்சித்திருக்கிறார் என்பது அறிதலால் வருவது உணர்வு. அதைச் சார்ந்து அவருக்கு அந்த உணர்வை வெளிப்படுத்தும் உணர்ச்சி சரியானது. சும்மா பாடுதல், ஆடுதல், கைகளை உயர்த்தி வெறுமனே சத்தமிடல், ஆராதனை என்கிற பெயரில் உணர்ச்சிவசம் அடைந்து சத்தமிடல், கண்ணீர் சொறிதல், புல்லரித்தல், அந்நியபாஷையில் பேசுதல் – இதற்கும்…

சுய முன்னேற்றம்! புத்தகங்கள் வழியே?

சுய முன்னேற்றம்! புத்தகங்கள் வழியே?

ஒரு காலத்தில் எம் எஸ் உதயமூர்த்தி புத்தகங்கள் சிலவற்றை நான் வாசித்திருக்கிறேன். குறிப்பாக ‘உன்னால் முடியும் தம்பி’. ஆங்கிலத்தில் ஏராளம் உண்டு. தற்காலத்தில் பல தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகக் கண்காட்சி கண்காட்சியாக அவை அலைவதையும், அவற்றை வாங்கி ‘முன்னேறிவிட’ மக்கள் கூட்டம் அலைமோதுவதையும் காணலாம். ஆனால், ஒரு கிறிஸ்தவராக இந்த சுய முன்னேற்றப்புத்தகங்களை வாசிக்கலாமா, இல்லை தேவையில்லையா என்று கேட்டால், கிரேங்கர் ஸ்மித் தரும் ஒரு பதிலையே தரவிரும்புகிறேன்.  “சுய முன்னேற்றப் புத்தகங்கள் எல்லாம் பிரச்சனை வெளியில்…

நான் யார்?

நான் யார்?

வேலைக்கான இண்டர்வியூ சென்றிருக்கிறீர்களா? அங்கு கேட்கப்படும் முக்கியமான கேள்வி – ‘உங்களைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்’ என்பார்கள். அதுவரை யோசிக்கவில்லை என்றால் திகிரென்று கூட இருக்கும். “நா…நா.. வந்து, என் பேரு..” என்று நாக்குக் குழறுவதில் இருந்து, இல்லாத பொல்லாத விஷயங்களைக்கூட நம்மைப் பற்றி என்று சொல்லக்கூடிய இடம் இண்டர்வியூக்கள்.  நம்முடைய அடையாளங்கள் பொதுவாக நம்மைப் பற்றிய அபிப்பிராயங்கள் மேல்தான் கட்டப்படுகின்றன. நம்மைப் பற்றி நாம் அறிந்திருப்பதற்கும், அடுத்தவர் அறிந்திருப்பதற்குமே கூடப் பல முரண்கள் இருக்கும் என்பதால் நம்முடைய…

கிறிஸ்தவக் கிறிஸ்தவன்

கிறிஸ்தவக் கிறிஸ்தவன்

நீங்கள் எந்தச் சபைக்குச் செல்வோராக இருந்தாலும் அங்கே சும்மா ஞாயிற்றுக்கிழமை மட்டும் சென்று உட்கார்ந்து எழுந்துவரும் கிறிஸ்தவராக இல்லாமல் – கிறிஸ்துவின் சீஷராக இருக்க சில விஷயங்களைக் குறித்த அறிவும் செயல்பாடும் அவசியம். (அவைகளை “குறைந்தது” ஏழு வகையாக கீழே பிரிக்க முயல்கிறேன்.) இவற்றில் பெரும்பாலான விஷயங்களை தவிர்த்துவிட்டு – பணச் செழிப்பு, ‘எங்கே விழுந்தீர்களோ அங்கேயே உயர்த்துவார்’, இயேசுவின் நாமத்தை சொன்னால் போதும்..சுகம், என்பதான வார்த்தை ஜாலங்கள், ஆட்டம் பாட்டம் என்று பொழுதுபோக்கு என்றிருந்தால் மேலே…

தேவன் தன் முடிவுகளை மாற்றிக்கொள்பவரா?

தேவன் தன் முடிவுகளை மாற்றிக்கொள்பவரா?

நம்முடைய மனம் (வாக்குறுதி, பேச்சு) மாறுவதற்கும் தேவன் தன் மனதை மாற்றிக்கொண்டார் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. (அல்லது சம்பந்தமே இல்லை). நிச்சயம், நம்மைப்போல ஒன்றைச் செய்ய நினைத்து, தன் திட்டதில் ஏதோ குறையைப் பாதிவழியில் கண்டுபிடித்ததால் மாற்றிக்கொண்டார் என்று ஐயப்பட வழியே இல்லை. காரணம், அப்படி இருந்தால் அவர் இறைவன் அல்ல. அப்படி அவர் முடிவுகளை மாற்றிக்கொண்டேயிருப்பாரானால், நம்மைபோல அவரும் குழப்பமானவராகத்தான் இருப்பார் என்று கருதவே வாய்ப்புண்டு. மாறாக நாம் அவரை விசுவாசிக்கக் காரணமே, அவர் என்றும்…

எதெல்லாம் சரியாக இருக்க வேண்டுமோ…அதெல்லாம்

எதெல்லாம் சரியாக இருக்க வேண்டுமோ…அதெல்லாம்

முன்பு ஒரு பதிவில் கோல்டிலாக்ஸ் என்கிற வார்த்தையைக் குறிப்பிட்டிருந்தேன். இதற்குச் சரியான ஒற்றைப் பதம் தமிழில் என்னவென்று தெரியவில்லை. இதைச் “சரியான, பொருத்தமான” என்று சொல்லலாம்.  “கோல்டிலாக்ஸ்” என்ற இந்தப் பதம்,  “கோல்டிலாக்சும் மூன்று கரடிகளும்” என்ற சிறுவர் கற்பனைக் கதையிலிருந்து வந்த ஒரு சொல். (ஆங்கிலத்தில் இதுபோன்று பல வார்த்தைகள் புதுசு புதுசாகத் தோன்றுவதுண்டு). இக்கதையில் வரும் கோல்டிலாக்ஸ் ஒரு சிறுமி. அவள் அங்கு கஞ்சி நிரப்பப்பட்ட கோப்பைகளில் ஒன்றை “மிகவும் சூடாக”, இன்னொன்றை “மிகவும்…

கடவுள் மனிதனாகப் பிறக்கவேண்டும்…!

கடவுள் மனிதனாகப் பிறக்கவேண்டும்…!

இயேசு நினைத்தால் “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது” என்று ஒற்றை வாக்கியத்திலோ, “எல்லோர பாவங்களையும் நான் மன்னித்துவிட்டேன்  வாங்க என்னோடு பரலோகத்துக்கு” என்றோ  சொல்லி நம் எல்லோரையுமே மன்னித்திருக்கலாமே? அதை அவர் இறைவனாக இருந்துகொண்டே செய்திருக்கலாமே? இதற்காக இந்த பூமியில் அவதரித்ததெல்லாம் அவசியமா? இப்படியெல்லாம் சிந்தித்தது உண்டா?  இல்லையென்றால் இப்போது சிந்தித்துவிடலாம். அப்படிச் செய்ய அவருக்கு வல்லமை உண்டு தான். ஆனாலும், அப்படிச் செய்யாமல், இன்னும் சிறப்பான, நியாமான முறையில் செய்வதுதான் அவருக்கு அது அவசியமாகத் தோன்றியது! காரணம்…