
கிருபை சத்தியம் கிறிஸ்து
கிறிஸ்து பூமியில் வந்தபோது கிருபையைக் குறித்துப் போதிக்கவில்லை. காரணம் அவர் மனு உருவில் வெளிப்பட்டதே கிருபையாகத்தான். அவர் கிருபையாக இருந்தார். (லூக்கா 18:13). சத்தியம் என்றால் என்ன என்று கேட்ட பிலாத்துவுக்கு அவர் பதில் சொல்லவில்லை. சத்தியத்தினிடமே சத்தியம் என்றால் என்ன என்று கேட்டால் எப்படி? சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவர் அவர். நானே சத்தியம் என்றவர். கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின. (யோவான் 1:17) கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் வார்த்தையான கிறிஸ்து மனிதருக்குள் வந்து வாசம்…

கிறிஸ்தவத்தில் சட்டவாதம்: எளிய விளக்கம்
சமீபத்தில் ஒரு பிரசங்கம். அதில் பேசுபவர் ஒற்றைக்காலில் ‘முட்டிபோட்டு’ தான் ஜெபித்த விதத்தை விளக்கிக்கொண்டிருந்தார். மூட்டு இரண்டும் ‘காப்பு காய்த்து’ விடும்வரை ஜெபம் பண்ணுவாராம். அதாவது கடவுளை ‘இரங்க’ வைத்து இறங்கி வரச் செய்தல்.! இது ஒற்றைக்காலில் கிடுகிடு மலை உச்சியில் நின்று தவம் செய்வது போன்று; அதாவது அவரது கடினமான இந்த முயற்சிகளின் பலனாக, கடவுளின் மனதை இளக வைத்து, குளிரவைத்து – ஐஸ் வைத்து… அவர் விரும்பின காரியத்தை நடத்திவிடும்! தமிழ்க் கிறிஸ்தவத்தில் அதிகமாகப்…

கெட்ட நல்லவைகள்
நமக்குள் இருக்கும் கெட்ட விஷயங்கள் பளிச்சென்று தெரிந்துவிடும். ஆனால், பல இடங்களில் நல்ல விஷயங்கள், நாம் அறியாத வகையில் நமக்கு இடைஞ்சலாக இருக்கும்! இதற்கு சுயபரிசோதனை அவசியம். ஏனென்றால், நல்ல பழக்கவழக்கங்கள் என்பவை இயல்பில் நல்லவைகளாக இருப்பதால், நம் இருதயம் அதில் மகிழந்து நின்றுவிடும். எனவே, ஒரு கட்டத்தில் நல்லபழக்க வழக்கங்களே நம்மை நல்லவர்களாக ஆக்கிவைத்திருப்பதாக நினைக்கத் துவங்குவோம். விளைவு, நம்மிடம் நம்மைபோல இல்லாதவர்களை, நல்லவர்கள் அல்ல என்றும் கருதம் அபாயம் உண்டு. கிறிஸ்தவர்களாக நாம்…

தத்துப்பிள்ளைகள்
பொதுவாக குழந்தை இல்லாதோர் தங்கள் முயற்சிகள் பலனளிக்காமல், வெகுவாய் அயர்ச்சியடைந்த பின்பு தான் சுவிகாரமாகக் குழந்தைகளைத் தத்தெடுப்பார்கள். ஆனால் தேவனோ, தனக்கு ஒரு சொந்த – மூத்த பிள்ளையாகிய இயேசு இருந்தபோதே, பாவிகளாகிய நம்மையும் தன் மிகுந்த அன்பினால் புத்திரராக்க விருப்பம் கொண்டு, தன் குடும்பத்தில் இணைக்க விரும்பினார். அந்த அன்பு மிகப்பெரிது! அது எவ்வளவென்றால், தம் இளைய குமாரராகிய நம்மைத் தன் குடும்பத்தில் இணையத் தகுதிப்படுத்தத், தன் மூத்த குமாரனாகிய ஒரே பிள்ளையை பலியிட்ட அளவுக்கு!…

பதினோராம் மணிக் கிருபை!
அதிகாலை வேலைக்கு வந்தவர்களுக்கு எஜமானன் கொஞ்சம் அதிகம் கொடுத்திருந்தால் என்ன? எல்லாருக்கும் ஒரேபணம் கூலி என்பது நியாயமாகப்படவில்லையே என்று விஷயம் புரியாத நாட்களில் நான் நினைத்து உண்டு. அந்தப் பகுதியை தியானித்திருப்பீர்கள் என்றால் (மத்தேயு 20) நீங்களும் அப்படி உணர்ந்திருக்கலாம். காரணம், நாம் எல்லாருமே நம்மை அதிகாலையில் இருந்து வேலை செய்பவர்களாகக் கருதிக்கொள்ளவதுதான். இங்குதான் இறைநீதியும் நம் மனதில் தோன்றும் நியாயங்களும் ஒன்றல்ல என்பதைக் கற்றுக்கொள்ள முடியும். பகலில் உஷ்ணம் இருக்கும், கஷ்டம் இருக்கும், வெயில் இருக்கும்…

லாஜிக் இடிக்கிறது
சமீபத்தில் ஒரு மேடையில் லாஜிக்கலான உளறல் ஒன்றை ஒருவர் சொன்னார்: “சினிமாவில் நடிப்பவர்களையே தேவன் கோடீஸ்வர்களாக ஆக்கி இருக்கிறார்கள் என்றால் உன்னை பெருங்கோடீஸ்வரனாக மாற்ற மாட்டாரா?” என்று. கீழே கேட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு, அவர் துள்ளித் துடித்து கத்திப் பேசியவுடன், “ஆமா..சரிதானே..” என்றுதான் தோன்றி இருக்கும். வெறும் லாஜிக்கலாக இருப்பதைச் சரியென்று நம்புவதால் வரும் அபாயங்கள் இவை. ஆனால், வேதத்தில் பல விஷயங்கள் லாஜிக்கலாகவே (தர்க்கரீதியாகத்) தோன்றாது. உதாரணமாக, இயேசு முழு மனிதனாகவும் அதே சமயம், முழுக் கடவுளாகவும் இருந்ததாகப்…

விடுதலைக்குத் தடை!
இரட்சிப்பில் பாவமன்னிப்பு என்பது நமக்குள் பிரதானமாக வந்திருக்கும் ஆசிர்வாதம். ஆனால், அத்துடன் அந்த ஆசிர்வாதம் நிறுவவிடுவதில்லை. மாறாக பாவத்தின் விளைவுகளால் வந்த விஷயங்களில் இருந்தும் நம்மை தேவன் தொடர்ச்சியாக பல நிலைகளில் விடுவிக்கிறார்; விடுவித்துக்கொண்டிருக்கிறார்; இன்னமும் விடுதலை செய்வார்! எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான். எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான் என்று சங்கீதக்காரன் எழுதும்பொழுது இரட்சிப்பின் ஆசிர்வாதமான இந்த விடுதலையை உணர்ந்து பாடலாக்கியிருக்கிறார்….

உணர்ச்சிகளில் மாற்றம்
கோபம், எரிச்சல், பயம், வருத்தம் போன்றவை எல்லாம் “அகிறிஸ்தவ” உணர்வுகள் என்று நினைத்தால் அது தவறு. உண்மையில் மனிதன் விழுந்ததில் இந்த சுபாவங்கள் எல்லாம் இடப்பெயர்ச்சி அடைந்துவிட்டன. விளைவு கோபம் மூர்க்கமாக, பயம் திகிலாக, வருத்தம் என்பது அவநம்பிக்கையாக – மனக்குழப்பமாக என்று சுபாவங்களின் சுபாவங்களே இருதயத்தில் அதனதன் இருப்பிடத்தைவிட்டு விலகிவிடுகின்றன. கோபம் கொண்டால் உடனே பாவம் செய்தல் அதன் விளைவுதான். அநீதியின்பால் கோபம் கொள்ளல், அநியாயத்தின்மேல் எரிச்சல் அடைதல், தேவனுக்குப் பயப்படுதல், பிறர் வருத்தம் கண்டு…

நாம் நல்லவர்களாக இருந்தால் போதுமா?
நல்லவனுக்கும், கிறிஸ்தவனுக்கும் ஒரு பெரும் வேறுபாடு உண்டு. நல்லவர்கள் முடிந்தவரை நல்லவர்களாக வாழ்ந்து, தங்களுக்கும் மற்றவர்களுக்கும் தொல்லை தராமல் வாழ நினைக்கிறவர்கள். அவர்களே கடவுளை நம்புகிறவர்களாக இருந்தால், நல்லவர்களாக இருந்து கடவுளது நேசத்தைப் பெற முயற்சிப்பார்கள். தாங்கள் நல்லவர்களாக இருப்பதும், மற்ற நல்லவர்கள் தங்களை அங்கீகரிக்கவேண்டும் என்பதிலும் மிக கவனமாக இருப்பவர்கள்இவர்கள். ஆனால், கிறிஸ்தவன் அப்படி இல்லை. அவனிடம் வெளிப்படும் நன்மை – அது அவனுக்குள் வசிக்கும் கிறிஸ்துவிடம் இருந்து வெளிப்படுவதாக நம்புபவன். தான் நல்லவனாக…

உன்னால் முடியும் தம்பி
ஒரு புதுவருடம் துவங்கினால் போதும்; ஒரு முயற்சிப்பட்டியலை கையில் தயாரித்து வைத்துக்கொள்வது துவங்கிவிடும். இரட்சிப்பின் அனுபவத்துள் இருப்பவரும்கூடச் செய்தும் தவறு – தங்கள் சொந்த முயற்சியில் அவர்களாகவே சரிசெய்யக் கிளம்புவதுதான். ஆனால், தேவனுடைய உதவியின்றி தேவையற்ற எந்த வேண்டாதவைகளையும் – அப்பட்டமாகத் தெரிபவற்றையும்கூட – நம்மால் நீக்கவே இயலாது. நம்முடைய இயல்புகளை மாற்றிக்கொண்டால் வாழ்க்கையின் தரத்தையே மாற்றலாம் என்கிற எண்ணம் உலகத்தில் உண்டு. பல சுய முன்னேற்றப் புத்தகங்கள் எழுதப்படுவது இதன் அடைப்படையில்தான். உதாரணமாக, நீங்கள்…