Benny Alexander

ஒரு நேரத்தில் ஒரு அடி

ஒரு நேரத்தில் ஒரு அடி

இரவுகள் இருளாக இருந்த காலங்கள் அது. இன்று போல லைட் ஃபொல்யூஷன் இல்லாத காலங்கள். இன்று நகரங்களில் மட்டுமல்ல, குறுநகரங்களில் கூட ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சி இருளை மறைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், சில ஆயிரம் ஆண்டுகள் முன்பு – அன்று ஒரு இரவில் ஆபிரகாமால் தேவன் வானத்தைப் பார்க்கச்சொன்ன போது சுமார் 20000 நட்சத்திரங்களைப் பார்த்து, எண்ணி இருக்க முடியுமாம். இன்று பல நாட்களில் நம்மால் அது இயலாது. நட்சத்திரங்களைக் கோள்களைப் படமெடுக்க விண்வெளிப் புகைப்பட ஆர்வலர்கள் இருளைத்தேடி அலைகிறார்கள்….

சங்கிலியால் கட்டு… நரகத்தில் தள்ளு…!

சங்கிலியால் கட்டு… நரகத்தில் தள்ளு…!

பூமியும் வானமண்டலங்களும் (cosmos) பிசாசின் அதிகாரத்துக்குட்பட்டவை. குறிப்பிட்ட காலத்திற்கு அனுமதிக்கப்பட்ட அதிகாரம் அவனுக்கு அங்கே உண்டு. எதிரி ஆதிக்கம் செலுத்தும் நம் பகுதி (Enemy occupied Territory) எனலாம். தேவனுடைய அதிகாரத்துக்குட்பட்டு பிசாசுக்கும், அதேபோல, அவரது சுதந்திரத்தில் பங்குள்ளவர்களாகிய நமக்கும் சில அதிகாரங்களை தேவனே அளித்துள்ளார். அவரவர் அதிகாரத்துக்குட்பட்ட எல்லையில் அவரவருக்கு வல்லமை உண்டு. ஆனால், எல்லை தெரிந்திருப்பது அவசியம். பிசாசு தன் குணக்கேடால் எல்லை மீறுபவன். ஆனால், நமக்கோ எல்லை மீறும் வேலை இல்லை, காரணம்…

தூங்கும் மிருகம்?

தூங்கும் மிருகம்?

ஓவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகம் தூங்கிக் கொண்டிருக்கும். அது அவ்வப்போது எட்டிப்பார்க்கும் என்று சொல்வார்கள். அதாவது, நமக்குள் இருக்கும் நன்மையான எண்ணங்களுக்கும், தீமையான எண்ணங்களுக்கும் உருவமும் உயிரும் அளித்தால் நமக்குள் ஒரு நல்ல மனிதனும் தீய மிருகமுமாக நமக்குள்ளேயே இருவர் உண்டு – என்கிற சிந்தனை உலகத்தில் இருந்து வரும் ஒரு சிந்தனை.!  சிலருக்கு நல்லவன் வெளியே உலாவிக்கொண்டிருப்பான் – அவர்கள் நல்லவர்கள். சிலருக்கு தீயவன் வெளியே. அவர்கள் மோசமான மிருகங்கள். பெரும்பாலும் நல்லவர்களுக்குள்ளே தூங்கிக்கொண்டிருக்கும் மிருகத்தை…

ஒரு வேதவாசிப்பு டெக்னிக்

ஒரு வேதவாசிப்பு டெக்னிக்

“பைபிளைத் திறந்த உடனேயே தூக்கம் கண்ணக்கட்டுது பிரதர்” என்பவரா நீங்கள்? வேதத்தை மனதில் இருத்த ஆசை என்றாலும், வாசித்த பல மறந்து விடுகிறது என்கிற குறை அழுத்துகிறதா? அதற்குத்தான் இந்த ஒரு சிறு டெக்னிக்கைப் பயன்படுத்தும் ஆலோசனைக்கட்டுரை! கிறிஸ்தவர்களுக்கு, வேதத்தை தியானம் செய்தல் என்பது வெறும் அறிவுசார் பயிற்சி அல்ல; அது தேவனுடனான நம் உறவை ஆழப்படுத்தவும், அன்றாட வாழ்வில் இறை ஞானத்தைப் பெறவும் அவசியமான வழியாகும். இருப்பினும், சிக்கலான உபதேசங்களைப் புரிந்துகொள்வது நமக்குச் சவாலானதாக இருக்கலாம்….

ஏரோதுக்கள்

ஏரோதுக்கள்

புதிய ஏற்பாட்டில் “ஏரோது” என்ற பெயர் கிட்டத்தட்ட ஐம்பது முறை குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் இந்தப் பெயர் ஏரோது என்கிற ஒரு நபரை அல்ல –  பல்வேறு நபர்களைக் குறிக்கிறது. புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஏரோதுகள் அனைவருமே கிமு 40 இல் ரோமானியப் பேரரசால் யூதேயா மீது அமைக்கப்பட்ட ஆட்சியாளர்களின் வம்சத்தின் ஒரு பகுதியாக இருந்தனர். இந்த ஏரோதுக்கள் ஏசாவின் வழித்தோன்றல்கள் (ஏதோமியர்கள்!). யாக்கோபின் வம்சத்தினர் அல்ல, என்றபோதிலும் அவர்களின் முன்னோர்கள் யூத மதத்திற்கு மாறியிருந்தனர். புதிய ஏற்பாடு…

மீதமான அப்பங்கள்

மீதமான அப்பங்கள்

பன்னிரெண்டு கூடை நிறைய மீதமானவற்றை எடுத்தார்கள். ஏன்? ஆண்டவரால் இத்தனை பேர்  X இத்தனை அப்பம் = இத்தனை ஆயிரம் அப்பம் என்று துல்லியமாகக் கணக்குப் போட்டிருக்க முடியாதா? அவர்தான் சர்வ ஞானம் பொருந்தியவராயிற்றே? துணிக்கைகள் முழு சைஸ் அப்பங்கள் இல்லை. கையாளும்போது உடைந்த, பிய்ந்துவிட்ட துணிக்கைகளாக இருந்திருக்கலாம்.  நம் அருள்நாதர் தன் பிள்ளைகளுக்கு முழுமையானதை மட்டும் கொடுக்கவும், உடைந்துபோனவற்றை கொடுக்கவேண்டாம் என்று சொல்லி இருக்கலாம். கல்யாணவீட்டில் உடைந்த அப்பளங்களையெல்லாம் கடைசியில் பார்த்திருப்போமே அதேபோல்! ஆனால் அவையும்…

நீங்களும் இறையியலாளரே!

நீங்களும் இறையியலாளரே!

(குறிப்பு: இந்தக் கட்டுரை இறையியல் கல்லூரி செல்வது அவசியமா இல்லையா என்பதைப் பற்றியதல்ல) இறையியல் (Theology) என்றால் நமக்கு உடனடியாக மனதில் வருவது மதுரை அரசரடி, சென்னை குருகுல் மற்றும் பெங்களூரின் பிரபல இறையியல் கல்லூரிகளாக இருக்கக்கூடும். அதேபோல் இறையியலாளர் (Theologian) என்கிற வார்த்தையைக் கேட்டால் நினைவுக்கு வருவது இறைக்கல்வி பெற்ற பாஸ்டர்கள், குருமார்கள் தான். இது சரியே என்றாலும், இறைக்கல்வியை கல்லூரியில் சென்றுதான் படித்தாகவேண்டும் என்றும், அப்படிப் படித்தவர்கள்தான் இறையியலாளர்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கிருப்பது சரியல்ல. நாம்…

பாவமும் பரிசுத்தமும்

பாவமும் பரிசுத்தமும்

கிறிஸ்துவுக்குள் இருப்பவனுக்கு பாவம் என்றால் என்ன என்று அறிவது பெரியவிஷயமே இல்லை. சுருக்கமாக நினைவில் கொள்ள “இதெல்லாம் ஒரு பிரச்சனையா, தப்பா, ஆகாதா என்று கேள்வி வந்தால், அங்கு நிச்சயம் ஏதோ ஒன்று ஒளிந்திருக்கிறது. அது பெரும் குற்றமாக மனதில் பளிச்செனத் தெரியாவிட்டாலும், குற்றத்தின் நிழலான ஏதோ ஒன்றாக – ஒரு மீறுதல், அக்கிரமம் அல்லது பாவமாக இருக்கலாம். கிறிஸ்தவன் என்பவன் பாவத்தை மேலாண்மை செய்பவன் அல்லன். புது சிருஷ்டியாக இருக்கும் அவன், இன்று அவருடைய பரிசுத்ததில்…

சிங்கம் தன் வரலாறு கூறுதல்

சிங்கம் தன் வரலாறு கூறுதல்

‘சிங்கங்கள் புத்தகம் எழுதாத வரை, வேட்டைக்காரன் தன்னைக் குறித்துதான் பெருமையாக எழுதிக் கொண்டிருப்பான்’ என்று ஒரு ஆப்பிரிக்க பழமொழி உண்டு. எழுத்தாளர்கள் அனைவருக்குமே உள்ளதை உள்ளபடி எழுதுவது என்பது இயலாது. ஸ்டைல் என்கிற பேரிலாவது தங்களை எழுதுவதில் கலந்துகொண்டிருப்பார்கள். வரலாறும் அப்படித்தான்.  அக்கால மன்னர்களைத் தாண்டி வரலாற்று ஆசிரியர்கள் உண்மையை  மட்டும் எழுதியிருப்பார்களா என்பது சந்தேகம்தான். இதை வரலாறு படிப்பவர்களே ஒத்துக்கொள்கிறார்கள். யுவான் சுவாங், பாஹியான் போன்றவர்கள் எல்லாம் அந்த வகையறாக்கள். அவர்கள் எழுதியவை எல்லாம் சரியாகத்தான்…

தாங்கமாட்டீர்கள் பாகம் 6 – சுவிசேஷம்

தாங்கமாட்டீர்கள் பாகம் 6 – சுவிசேஷம்

 [பாகம் 1] [பாகம் 2] [பாகம் 3] [பாகம் 4] [பாகம் 5] “ஓ, இதுதானா அது” என்கிற ஆச்சரியமான அனுபவம் இல்லாதவர் எவரும் இருக்க வாய்ப்பில்லை.  பலவருடங்கள் படித்துப் பரிட்சைகளில் பாஸாகி இருந்தாலும் அவற்றின் உண்மையான விளக்கங்கள் பிற்காலங்களில் கிடைத்த அவை புரிகிற காலத்தில் கிடைத்திருக்கும். “இதைத்தான் படிக்க அப்போது திணறினோமா?” என்று நினைக்கவைக்கும் தருணங்கள் அவை. கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து பூமியில் இருந்த காலங்களில், தன் சீஷர்கள்தான் என்றாலும் அவர்களுக்கு எல்லாவற்றையும் விளக்கமாகப் போதித்துவிடவில்லை. அவர் இறைத்தன்மை கொண்டிருந்தவர் என்றபோதிலும் சீஷர்களின் கேட்டறியும்…