
இப்படிக்கு பிசாசு
‘சாத்தான் வேதம் ஓதுகிறது’ என்பது தெரியும். ஆனால், பிசாசு கடிதம் எழுதுவது? அதுவும் தன் மருமகனுக்கு “நல்ல ஆலோசனை”களைக் கடிதங்களாக எழுதினால்? பிரச்சனைகளைக் கொண்டுவருபவன் பிசாசு. அந்தப் பிசாசுக்கே சில பிரச்சனைகள் இருந்து அதைப் பிசாசே சொன்னால் எப்படி இருக்கும்? அதையும் புத்தகமாக, “எனக்கு இருக்கும் பிரச்சனைகள் இவை, இவற்றைச் எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை. எனக்கு திகைப்பாக இருக்கிறது” என்றெல்லாம் புலம்பலாக எழுதினால்? பிரச்சனைகளைக் கொண்டுவருபவன் பிசாசு. அந்தப் பிசாசுக்கே சில பிரச்சனைகள் இருந்து அதைப்…

சி. எஸ். லூயிஸ்
சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த கிறிஸ்தவ எழுத்தாளர் CS Lewis என்று சொன்னால் பலர் மறுக்கப்போவதில்லை. அவரை வாசிப்பது கடினம் என்பது முதல் புத்தகத்தை வாசிக்கும்போது தோன்றியது. அதற்குக் காரணம் அவர் அல்ல. அவரது சில முக்கியமான புத்தகங்கள் அவரது உரைகளில் இருந்து எழுத்துக்களாகத் தொகுக்கப்பட்டவை. அக்கால பிரிட்டிஷ் அறிஞர்களின் ஆங்கிலம் என்பதால் அதை அப்படியே எழுதிவிட்டார்கள். அவரது கருத்துக்களில் கைவைத்துவிடக்கூடாது என்பதற்காகவே புத்தகங்களை எளிமைப்படுத்தும் முயற்சியை எவரும் செய்யவில்லை. நாத்திகத்தில் இருந்து ஆத்திகனாக மாறிய கிளைவ்…

துப்பாக்கிச் சண்டையில் கத்தி
துப்பாக்கிச் சண்டைக்குக் கத்தியோடே போகாதே என்ற அர்த்தத்தில் (Don’t go to gun fight with a knife) ஆங்கிலச் சொலவடை ஒன்று உண்டு. எதிராளி துப்பாக்கியுடன் வரும்போது அவனைச் சமாளிக்க கத்தியோடு சென்று புல்லட் துளைத்த யாரோ ஒருவன் கதையில் கிடைத்த நீதியாகத்தான் இது இருக்கவேண்டும். இதன் அர்த்தம் என்னவெனில் சண்டைக்கேற்ற ஆயுதம் அவசியம். அதுவும் நம் ஆயுதத்தைத் தீர்மானிப்பவன் கூட எதிராளிதான் என்று சொல்வார்கள். இந்தக் கட்டுரை அப்படிப்பட்ட சண்டை பற்றியது. ஆனால் துப்பாக்கிச்…

நீங்கள் வீணடித்த வாழ்க்கை
குறிப்பு: பதிவு ஒரு எழுத்தாளரைப் பற்றியது அல்ல. மால்கம் மஃகரிட்ஜ் ஒரு ஆங்கில எழுத்தாளர். கொஞ்சம் நம்ம ஊர் ஆர்.கே.நாராயணன் மாதிரி. மால்கம் ஜாலியாக ஆனால் அதேசமயம் ஆழமாக எழுதுபவர். ஏகப்பட்ட அனுபவங்கள் அவருக்கு. ஆங்கிலேயர். ஆனால், இரஷ்யாவில் கம்யூனிசத்தின் தொடக்க காலங்களில் பிரச்சனைகள் மிகுந்த பகுதிகளில் இருந்திருக்கிறார். உக்ரேனியப் பஞ்சத்தைக் குறித்து ஆராய்ந்து ஆவணப்படுத்தியிருக்கிறார். இந்தியாவிலும் சில காலம் வாழ்ந்தார். மதர் தெரசாவை சந்தித்திருக்கிறார். அவருடனும் நல்ல நட்பு இருந்தது. மஃகரிட்ஜ் சந்தித்த எக்கச்சக்கமான நபர்கள்,…

டீட்ரிச் போன்ஹோஃபர் – சீஷத்துவத்தின் விலை
சென்ற நூற்றாண்டின் முதல் 50 வருடங்கள் பல நாடுகளில் மரணக்களங்களாகத்தான் இருந்தன. குறிப்பாக உலகப் போர்களின் விளைவாக ஐரோப்பா சந்தித்த இழப்புகள் பல இலட்சம். ஆனாலும், அக்காலங்களில் கோழைத்தனமான கொடூரங்களை அரங்கேற்றிய பலர் நடுவில் அவர்களை மிகத்தைரியமாக எதிர்கொண்ட வீரர்களும் தோன்றினர். அவர்களில் ஒருவர் டீட்ரிச் போன்ஹோஃபர் (Dietrich Bonhoeffer) . இவர் ஒரு ஜெர்மானியர், கிறிஸ்தவர். தமிழ்க் கிறிஸ்தவர்கள் அதிகம் அறிந்திராதவர் போன்ஹோஃபர். வரலாற்றின் கருமையான பக்கங்களில் கிறிஸ்துவுக்காக வைராக்கியமாக ஒளிவீசும் நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் இவர்…

தூரத்துக்கும் தேவன்
நம்மால் ஒளியின் வேகத்தை அடையமுடியுமா? அடைவது எப்படி? அடைந்தால் என்ன ஆகும்? ஒரு கிறிஸ்தவனாக இந்த அறிவியலைக் குறித்து நம்மால் சிந்திக்க முடிந்தால்? பெரியப்பா மாதவன் பல வருடங்கள் முன் சொன்னது. “கடவுள் மிக வேகமானவர் என்று நினைக்கிறேன் பென்னி. அதனால்தான் அவரை நம்மால் பார்க்க முடிவதில்லை. வேகமாகச் சுற்றும் சைக்கிளின் ஸ்போக்ஸ் கம்பியை நம்மால் பார்க்கமுடிவதில்லையே. அதுபோலத்தான் கடவுளும் என்று நான் நினைக்கிறேன்” என்றார். அவருக்குக் இறை நம்பிக்கை இல்லை என்று நான் நினைத்துக் கேட்டபோது…

டான் ரிச்சர்ட்ஸன் – அறியப்படாத மக்களிடையே அறியப்படாத தேவன்
முன்குறிப்பு: இதுவரை ஒருமுறைகூடக் கேள்விப்பட்டிராத ஜனங்களுக்கான நியாயத்தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது எனக்கு வந்த ஒரு சந்தேகம். அது, மேலும் அறிய சில வருடங்கள் முன்னர் ஒரு தேடலைத் துவக்கியது. உதாரணமாக, எவரும் நுழைய இயலாத அமேஸான் காடுகளுக்குள் வசிக்கும் மக்கள் இயேசு என்கிற பெயரைகூடக் கேள்விப்படாதிருந்தால் அவர்கள் நித்திய வாழ்வு அதோகதிதானா என்கிற கேள்வி!. எனவே, சிலவருடங்களுக்கு முன்னர் அதை அறிந்து ஒரு கட்டுரையாக எழுதவும் செய்தேன். (ஆனால், அதை இங்கு பதிவிடவில்லை). ஆனால், அப்போதைய…

நான் பைபிள் மட்டுமே வாசிக்கிறேன்.
எத்தனை புத்தகங்களையும் படியுங்கள். ஆனால், வாழ்வது வேதத்தின்படி இருக்கட்டும் என்றார் போதகர் சார்ல்ஸ் ஸ்பர்ஜன். புத்தகம் வாசிப்பவர்களுக்கு முன் இருக்கும் சவால், வாசிக்கிறேன் பேர்வழி என்று வேதவாசிப்பைக் குறைத்துவிடக்கூடும் எனபதுதான். இது அபாயமான சவால். புத்தகம் வாசிக்காமல் நான் வேதம் மட்டுமே வாசிப்பேன் என்று சொல்பவர்கள் வைக்கும் நியாயமான கருத்தும் இந்த அபாயத்தைக் கருதிதான். ஆனால், புத்தகம் வாசிப்பவர்கள் எந்தச் சாக்குப் போக்கும் சொல்ல இயலாதபடி அவற்றை எதற்காக வாசிக்கிறோம் என்கிற தெளிவிருந்தால் இந்த அபாயத்தை சுலபமாக…

இரும்பை இரும்பு
கூராக, அபாயகரமாக எதாவது இரும்பு முனைகள் (அல்லது பிளாஸ்டிக், மரம்) நீட்டிக்கொண்டு இருக்கும். கவனியாமல் விட்டால், இப்போது இல்லாவிட்டால் ஒரு நேரம் ‘சரக்’கென்று அது ‘இரத்தம் கேட்பது’ உறுதி. எனவே, ஒரு நல்ல அரம் இருப்பின் அதைக் கொண்டு உடனடியாக அந்தப் பகுதியைத் தேய்த்து முனை மழுங்கப்பண்ணிவிடுவது நல்லது. ஆங்கிலத்தில் Iron file அல்லது Rasp என்னும் நல்ல அரம் ஒன்று எப்போதும் என்னிடம் இருக்கிறது. முன்பைப்போல கத்தி தீட்டுபவர்களை அதிகம் தெருக்களில் காணமுடிவதில்லை. எனவே, அதை…

கிறிஸ்தவம் தந்த கொடை
ஒருவேளை பூமிக்கு வராமல் இருந்திருந்தால்? அவர் நமக்காக மரிக்காமல் இருந்திருந்தால்? தன்னால் இரட்சிப்பட்டவர்களாக தன் சரீரமான சபையை பூமியில் அவர் ஸ்தாபிக்காமல் இருந்திருந்தால்? உலகமெங்கும் அவரது சீடர்கள் பரம்பி இன்றுவரை அவரது அன்பின் நீட்சியாகச் செயல்படாமல் இருந்திருப்பார்களானால் இன்று எப்படி இருந்திருப்போம்? எல்லா வசதிகளையும் அருகருகே கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டைச் சேர்ந்த நமக்கு, மொபைலிலும், போக்குவரத்திலும், இணையத்திலும் இனி வரும் காலங்களில் ஆர்டிஃபிஷ்யல் இண்டலிஜென்சிலும் இன்னமும் கணக்கிலடங்கா வசதிகளைப் பெற்ற ஒரு சமுதாயத்தில் இருக்கும் நாம், ஒரு…