Benny Alexander

கடவுளின் திட்டத்தில் மனிதன்

கடவுளின் திட்டத்தில் மனிதன்

மனிதனை சுய அறிவுடன் படைத்த நல்ல, நீதியுள்ள தேவன் நம் தேவன். இராஜாதிராஜாவாய் இருந்தாலும் சர்வாதிகாரியாய் அவர் இல்லை. நம்மைத் தேவதூதரிலும் சற்றுச் சிறியவராய்ப் படைத்தாலும், ரோபோக்களாய் இயந்திரகதியில் தான் விரும்பும்வண்ணம் மட்டுமே மனிதன் செயல்பட வேண்டும் என்று தேவன் நினைப்பதில்லை. மாறாக, முழுச் சுதந்திரம் கொடுத்து நம்மை இயங்கவிட்டதுமல்லாமல் தனக்கான வேலைகளையும் மனிதனுடன் பகிர்ந்து கொண்டு செய்வதில் ஆனந்தமடைபவர் அவர். இதை வேதம் முழுவதிலும் பல இடங்களில் கண்டு அறியலாம்.  இன்னும் சொல்லப்போனால், தான் செய்ய…

கல்வாரி சிந்தனைகள் -2

கல்வாரி சிந்தனைகள் -2

ஒரு பாத்திரத்தைச் சுத்தமாக்க வேண்டுமானால் நீர் வேண்டும் அல்லது ஒரு சிறு துண்டு துணியாவது வேண்டும். அதாவது, எதைச் சுத்தமாகக வேண்டுமானாலும் வேறு ஏதாவது ஒன்று வேண்டும்; நீர், நெருப்பு இப்படி ஏதாவது ஒன்று.  இப்படி ஒரு பாத்திரத்தைக் கூட வெளிப்புறப்பொருள் ஒன்றைக் கொண்டுதான் சுத்தமாக்க இயலும் என்கிறபோது மனிதன் மட்டும் தன் அகத்தைச் சுத்தமாக்கிக் கொள்ளத்தன்னால் இயலும் என்று நினைப்பது விந்தை.  இதை அறிந்தவர் கிறிஸ்து.  எனவே, தன் இரத்தம் கொண்டு நம் இரத்தம் சுத்திகரிக்க…

ஏன் தாகமாயிருக்கிறேன் என்று சொன்னார் இயேசு?

ஏன் தாகமாயிருக்கிறேன் என்று சொன்னார் இயேசு?

நானே ஜீவ ஊற்று என்று சொன்னவர், நான் தரும் தண்ணீரை அருந்துபவன் ஒருக்காலும் தாகமடையான் என்று சொன்னவர் – எப்படி தாகமாயிருக்கிறேன் என்று சிலுவையில் சொல்லியிருக்கமுடியும். இது கிறிஸ்துவை அறியாதவருக்கு மட்டுமல்ல, அறிந்தவருக்கே புதிர்தான்.  சிறுவயதில் நான் நினைத்ததுண்டு: இயேசுவுக்கு சிலுவையில் வலிதெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் இறைவன் என்பதால் வலியை உடலில் இருந்து எடுத்துப் போட்டிருக்க அவரால் இயலும் என்று. ஆனால் அவர் அதைச் செய்யவில்லை, மாறாக உண்மையாகவே தன் சரீரத்தில் வேதனைகளை அனுபவித்தார் என்பது புரிய…

உள்ளுணர்வு… எண்ணங்கள்…சிறைபிடிப்பு

உள்ளுணர்வு… எண்ணங்கள்…சிறைபிடிப்பு

என் விருப்பம் எது, கிறிஸ்துவின் விருப்பம் எது? என்னை எதுவரை அவர் அனுமதிப்பார்? அல்லது, நான் எதையெல்லாம் அவர் அனுமதி பெற்றுச் செய்ய வேண்டும அல்லது பெறாமலேயெ செய்யலாம்? என்கிற கேள்விகள் கிறிஸ்துவுக்குள் வளரும்போது வரும் சில ஆரம்பகால கட்டக் குழப்பங்கள். ஆனால், நம் விருப்பங்கள், எண்ணங்கள் எல்லாம் அவரிடம் இருந்துதான் வரவேண்டும் என்பதுதான் சத்தியம் என்றாலும், பலரும் இதை உடனடியாக விரும்புவதில்லை. எனக்கென்று விருப்பங்களே இருக்கக்கூடாதா? நானாக நல்லவைகளைக்கூடச் செய்யகூடாதா? நானாக எடுக்கும் முடிவுகள் சரியானவையாக…

ஏன் கடவுள் நம்மைப் படைத்தார்?

ஏன் கடவுள் நம்மைப் படைத்தார்?

மனிதர்களைக் கடவுள் படைத்திருந்தார் என்றால், மனிதனை ஏன் அவர் படைத்திருக்க வேண்டும்? மனிதனால் அவருக்கு என்ன பயன்? படைக்கப்பட்ட மனிதன் படைத்தவருக்கு என்ன செய்துவிடமுடியும் என்ற கேள்வி உங்களில் யாருக்காவது வந்திருக்குமானால் மகிழ்ச்சி. இறைவன் குறைவுள்ளவராக இருந்திருப்பாரேயானால் அவர் இறைவனாக இருக்க முடியாது. அவர் தன்னில்தான் நிறைவாகவே இருந்தார். மனிதனோ, மனிதனின் சேவையோ அவருக்குத் தேவைப்படவே இல்லை ஆனால், அவர் தான் அன்புகூறவும், தன்னிடம் சுயனலமில்லா அன்பை வெளிப்படுத்தவும் மனிதனைப் படைத்தார். அதுவும் இல்லாமல் அவரால் இருந்திருக்க…

என் நாமத்தில் எதைக் கேட்டாலும்

என் நாமத்தில் எதைக் கேட்டாலும்

என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன் (யோவான் 14:14) என்ற வசனம் சிறுவயதில் இருந்தே நமக்குப் பிடித்த வசனங்களுள் ஒன்றாக இருக்கும். என்னிடம் எதைக் கேட்டாலும் நான் தருவேன் என்று சிம்பிளாகச் சொல்லாமல், ஆரம்பத்திலேயே வருகிறதே ஒரு வார்த்தை. “என் நாமத்தினாலே…” என்று. அதென்ன? இயேசுவின் நாமத்தில் பிதாவே என்று தானே நாம் ஜெபித்துமுடிக்கிறோம். அப்படி முடிப்பதுதான் “என் நாமத்தினாலே” ஜெபிப்பதா? இதற்கு பதில் தெரிய, எதைக் கேட்டாலும் செய்வேன் அல்லது தருவேன் என்பதை…

எத்தனை பேர்களோ.. அத்தனை பேர்களுக்கும்.

எத்தனை பேர்களோ.. அத்தனை பேர்களுக்கும்.

எத்தனை எத்தனைபேர் இரட்சிப்பை விரும்பினாலும் அத்தனைபேரையும் இரட்சிக்க வல்ல மகாபெரிய இரட்சிப்பு அவருடைய இரட்சிப்பு. எத்தனை கோடிப்பேர் வந்தாலும் அத்தனைபேரையும் கழுவக்கூடிய வல்லமையான இரத்தம் அவருடைய இரத்தம். எத்தனைபேர் சமாதானம் வேண்டினாலும், அத்தனைபேரையும் அமைதலாக்கும் சமாதானம் அவருடைய சமாதானம். எவ்வளவு திரளான மக்கள் இயலாமல் வந்தாலும் அவர்களெல்லோரையும் தாங்கும் பெரிதான கிருபை அவருடைய கிருபை. எவ்வளவு வெறுமையில் கோடானுகோடிபேர் இருந்தாலும், அனைவரிலும் அன்புகூரக்கூடிய அளவுக்கு உன்னதமானது அவரது அன்பு. எவ்வளவு திரள்கூட்டம் மக்கள் அவர் அணைப்புக்குள் வந்தாலும்,…

எது கிறிஸ்தவ நாடு?


எது கிறிஸ்தவ நாடு?


கிறிஸ்தவநாடு என்று இவ்வுலகில் எதுவும் கிடையாது. அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரவேல் உட்பட. அவற்றைக் கிறிஸ்தவநாடுகள் என்று சொல்வது இந்தியா மதநல்லிணக்க நாடு, இங்கு அனைவரும் சமம் என்று சொல்வதைப் போன்ற நகைச்சுவை. பொதுவிலும், அரசு ஏடுகளிலும், கல்வெட்டுகளிலும் தாராளமாக எழுதி இப்படி அறிவித்துக் கொள்ளலாம். ஆனால், நம் இந்தியா இன்று எப்படி இருக்கிறது என்பதை அறியாதோர் இருந்தால் அவர் பல வருடங்களாக நினைவின்றி இருந்திருக்கவேண்டும். எப்படித் தம்மைக் கிறிஸ்தவர் என்று சொல்லிக்கொள்வோரெல்லாம் கிறிஸ்தவர் இல்லையோ அதேபோல் கிறிஸ்தவநாடு…

கல்வாரி சிந்தனைகள்-1

கல்வாரி சிந்தனைகள்-1

இவ்வுகவரலாற்றை மட்டுமல்ல, இரட்சிக்கப்படுகிற ஒவ்வொருவருடைய வரலாற்றையும் இரண்டாகப் பிரிக்கிறது சிலுவை. கிறிஸ்துவின் சிலுவைக்கு முன் சிலுவைக்குப்பின் என்று ஒவ்வொரு கிறிஸ்தவனின் வாழ்வும் பெரும் பிரிவாகப் பிரிக்கப்படுவது நிச்சயம். கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டோம். தேவகோபாக்கினைக்குத் தப்பிக்கொண்டோம். ——————————————————————————————————— இவன் தன்னைத் தேவனுடைய குமாரன் என்று சொல்கிறான், இது யூதர்களின் நியாயப்பிரமாணத்துக்கு விரோதமானது என்று வேதபாரகர் முதலில் இயேசுவின்மேல் குற்றம்சாட்டத்துவங்கினர்.  ரோமச் சட்டங்களின்படி இது ஒரு பெரியவிஷயமாகவும், இதெல்லாம் இயேசுவை மரணதண்டனைக்கு உரியவராகக் காட்டவில்லை என்று கருதிய பிலாத்து இவனிடத்தில் ஒரு குற்றமும்…

இதயமாற்று சிகிச்சை

இதயமாற்று சிகிச்சை

ஜெபத்தில் உங்கள் இருதயத்தை தேவனிடத்தில் கொண்டு செல்லுபோதெல்லாம் அவருடைய இருதயத்தை நாம் பெற்றுக் கொள்கிறோம் என்றார் கிறிஸ் லன்கார்ட்.  அதாவது, ஒவ்வொருமுறை ஜெபிக்கும்போதும் ஒரு இருதய மாற்று சிகிச்சையை உணர்ந்தால், அதுதான் சரியான ஜெபம்.  ஆவிக்குறிய வாழ்வின் ஆரம்பத்தில் இச்சிகிச்சை கடினமானது தான். ஆனால், அந்தக் கடினத்திற்குக் காரணம் அவரல்ல, நம் இருதயமே! நம் இருதயத்தின் தன்மை, அதன் போக்கு என்று எல்லாவற்றையும் என்றோ அறிந்தவர் அவர் என்பதை, நம் இருதயம் (நாம்) ஏற்கத் தாமதாவதால் ஏற்படும்…