அறிவியல் வளர வளர இறைவன் தேவைப்படமாட்டாரா?
“அறிவியல் வளர்ந்துகொண்டிருக்கிறது. அதனால், அறிவியலுக்கு இன்னும் சிறிது காலம் கொடுங்கள்; மதங்கள், குறிப்பாக கிறிஸ்தவம் அதன்பின் அவசியம் இல்லாமல் போய்விடும்” என்பது சில கடவுள் மறுப்பாளர்களின் வாதம். அதாவது, அறிவியல் வளர வளர, இறைவன் தேவையற்றவர் ஆகிவிடுவார் என்பது இவர்களுடைய எண்ணம். ஆனால், இந்த எண்ணம் மெய்யறிவுக்கு (Truth) முற்றிலும் புறம்பானது. இன்று நாம் வாழும் உலகம் அறிவியலால் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது என்பது உண்மைதான். நேற்று முடியாத பல காரியங்கள் இன்று சாதாரணமாக நடக்கிறது; அறிவியலால்…
ஏரோது: ஒரு கொலைகார வம்சத்தின் வரலாறு
புதிய ஏற்பாட்டில் “ஏரோது” என்ற பெயர் ஏறக்குறைய ஐம்பது முறை வருகிறது. ஆனால், நினைவில் கொள்ளுங்கள்: இது ஒரே நபரைக் குறிப்பதல்ல! ரோமானியப் பேரரசின் தயவால் யூதேயாவை ஆண்ட ஒரு வம்சத்தின் பெயரே ‘ஏரோது’. புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஏரோதுகள் அனைவருமே கி.மு. 40 வாக்கில் ரோமானியப் பேரரசால் யூதேயா மீது அமைக்கப்பட்ட ஆட்சியாளர்களின் வம்சத்தின் ஒரு பகுதியாக இருந்தனர். இவர்கள் யார்? ஆதிப் பிதாவாகிய யாக்கோபின் வழித்தோன்றல்கள் அல்ல; அவருடைய சகோதரன் ஏசாவின் வம்சத்தார் (ஏதோமியர்கள்)….
பவுல் கிறிஸ்தவத்தை உருவாக்கினாரா? ஒரு வேத வரலாற்றுப் பார்வை
வேதாகமத்தை ஆழமாக வாசியாத சிலர் மத்தியில், “இயேசு ஒரு நல்ல போதகர், ஆனால் பவுல்தான் இன்று நாம் காணும் கிறிஸ்தவ மதத்தை உருவாக்கினார் (Paul invented Christianity)” என்ற ஒரு கருத்து பரவலாக உண்டு. இயேசு போதித்த எளிய அன்பின் மார்க்கத்தை, பவுல் தனது இறையியல் அறிவாலும் நியாயப்பிரமாணப் பின்னணியாலும் சிக்கலான ஒரு மதமாக மாற்றிவிட்டார் என்பதே இவர்களின் வாதம். இந்தக் கருத்து எவ்வளவு தூரம் வேதத்திற்கும் சரித்திரத்திற்கும் புறம்பானது என்பதை நாம் ஆராய்வது அவசியம். பவுல்…
நாடு இல்லாத ஒரு நாடு
நாடு கடந்த அரசு (Provisional Transitional Government) என்ற வார்த்தையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இலங்கைத் தீவில் ஈழம் தனியே மலரவில்லை என்றாலும் 2009ஆம் ஆண்டில் பல நாடுகளிலும் வசிக்கும் ஈழத் தமிழர்கள் மனம் தளராமல் “நாடுகடந்த தமீழ் ஈழம்” என்ற ஒன்றை உருவாக்கினார்கள் அதாவது தங்களுக்கு என்று ஒரு நிலப்பரப்பு நாடாக இல்லாவிட்டாலும், மனங்களில் ஒன்றுபட்டு ஒரு நாட்டை உருவாக்கி அதற்கு உருத்திரகுமாரன் என்பவர் தலைமையில் ஒரு செயல்திட்டத்தையும் வகுத்தார்கள். நாடும் அதன் அமைவிடமும் ஒரு நாடு…
ஒரு அதிரடி அற்புதம்
கேள்வி: தேவன் ஒரு பெரிய அற்புதம் செய்து ஏன் அனைவைரையும் கிறிஸ்தவராக மாற்றிவிடக்கூடாது? பூமி இரண்டாகவோ, இல்லையென்றால் இந்துமா சமுத்திரம் வற்றினாலோ, எல்லோரும் அவரை ஏற்றுக் கொண்டு விடுவார்கள் அல்லவா? பதில்: ஆஹா, நல்ல கேள்விதான், ஆனால் கொஞ்சம் நிதானமாகத் தியானித்தால் இது எவ்வளவு ஒரு அபத்தமான சிந்தனை என்பது புரியும். ஆம், இறைவனால் ஒரு மகா பிரமாண்டமான அற்புதத்தை நிகழ்த்த முடியும்தான். அதில் எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால், ஏன் அவர் என் விருப்பபடி ஒரு…
முற்றிற்று
இந்திய வேதாகமச் சங்கத்தால் வெளியிடப்படும் வேதாகமங்களில் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் நாம் பார்க்க இயலும் வாசகம் ‘பழைய ஏற்பாடு முற்றிற்று’ மற்றும் ‘புதிய ஏற்பாடு முற்றிற்று’. முற்றிற்று என்பதன் முழு நோக்கம், இனி வேறு இல்லை என்றும், எழுதிக்கொடுக்கப்பட்ட தேவவார்த்தைகளால், வேதாகமம் முற்றுப்பெற்றாயிற்று; இனி பிற சேர்மானங்களுக்கு இடமில்லை என்பதுதான்!. ஆனால், நம் கையில் இருக்கும் வேதாகமம் போதாது என்று சொல்வதில் இருந்து வேதாகமம் முழுமையானது அல்ல என்று சொல்வதுவரை பலவிதமான போதனைகள் உபதேசிக்கப்பட்டு வந்திருக்கின்றன….
நீண்ட நெடிய கீழ்ப்படிதலுள்ள வாழ்க்கை
“ஒரே திசையில் நீண்ட கீழ்ப்படிதல்” (A Long Obedience in the Same Direction) எனும் சொற்றொடர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரபலமான ஜெர்மன் தத்துவஞானி ஃபிரெட்ரிக் நீட்சேவால் முன்வைக்கப்பட்ட ஒன்று. இதை வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியான கீழ்படிதல் என்றும் சொல்லாம். அதைக்குறித்து முதன்முதலில் அவரது “நன்மைக்கும் தீமைக்கும் அப்பால்” (Beyond Good and Evil) எனும் நூலில் எழுதியிருந்தார். நீட்சே, சடங்கு மதங்களின் மீதும் பாரம்பரிய ஒழுக்கவியலின் மீதும் விமர்சனங்களை முன்வைத்தவர். ஒரு தனிமனிதன் தனது வாழ்விற்குத்…
எளிய ஜெபம்
ஒரு பொடியன் மூலையில் அமர்ந்து கண்ணை மூடிக்கொண்டு “ABECDE…” என்று சொல்லிக் கொண்டிருந்தான். அவன் அம்மா வியப்புடன் அவனிடம் “தம்பீ… நீ என்ன செய்யுதே?” என்றார்கள். அதற்கு அவன் “நா ஜெவம் பண்ணுதேன்…” என்றான். “ஓ, ஆனா, நீ ABCD..ந்னுல்ல சொல்லிக்கிட்டு இருக்கிறமாதிரித் தெரியுது” “ஆமாம்மா…நீங்க ஜெவம் பண்ணச் சொன்னீங்க. எனக்கு நீங்க சொல்லித்தந்த ஜெபம் மறந்திருச்சி…அதுனால, ஆண்டவரே எனக்கு ஜெபிக்கதெரியாது… நா ABCD ஃபுல்லாச் சொல்றேன். அந்த எழுத்துக்களை வச்சி நீங்களே ஜெபம் பண்ணீக்கோங்க என்று…
இழப்பவன் முட்டாள் அல்ல!
ஜனவரி 8, 1956 அன்று ஜிம் எலியட் மற்றும் அவருடைய நண்பர்களான பீட்டர் பிளெமிங், எட் மெக்கல்லி, நேட் செயிண்ட், ரோஜர் யூடெரியன் ஆகிய ஐவரும் தாங்கள் நண்பர்களாக்கி விட்டோம் என்று நினைத்து நெருங்கிய பழங்குடிகளால் தாக்கிக் கொல்லப்பட்டார்கள். சிறுவயதில் சண்டேஸ்கூலோடு போய்விடும் வழக்கம் மிஷனரிமார்களின் கதைகளைக் கேட்பது. வயதாக வயதாக ஊர்க்கதைகளைக் கேட்டு வளரும் காதுகளுக்கு ‘பழங்கதைகள்’ என்று அவை அதிக ஈர்ப்பை அளிப்பதில்லை. ஆனால், தேவனுடைய ராஜ்யத்திற்காகத் தங்களையே அர்ப்பணித்து வாழ்ந்தவர்களின் வரலாற்றை அவ்வப்போது…
ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்புக்கள்
Image Source:https://bible-history.com ஒரு நல்ல ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுப்பது எப்படி? நீங்கள் தமிழ் வேதாகமம் மட்டுமே வாசிப்பவர் ஆனாலும், ஆங்கில வேதாகமம் ஒன்றாவது உங்களிடம் இருக்கவேண்டும். நான் சொல்வது அலமாரிகளில் 1960ல் இருந்து உறங்கிக் கொண்டிருக்கும் பழைய நம் தாத்தா கையெழுத்து காணப்படும் பழைய சிறு KJV வேதாமம் அல்ல. அது பத்திரமாக இருக்கட்டும். ஏனென்றால் ஆங்கிலத்தில் வாசித்துப் பழகாதவர்களுக்கான தொடக்கநாட்களுக்கான வேதாகமம் அது அல்ல. அதை வாசித்தால் பின்பு ஆங்கிலமே கசக்கக் கூடும். சுமார்…